என் இதயமே, என் சக யாத்ரீகனே
மீண்டும் உத்தரவு வந்துவிட்டது
நாம் நாடுகடத்தப்பட்டிருக்கிறோம்.
நம் நேசத்துக்குரியவளின் தூதுவன்
அவன் தடம் தேடி
அவன் பற்றிய குறிப்புகளைத் தேடி
பார்ப்பவர் ஒவ்வொருவரிடமும் கேட்டபடி
தெருத்தெருவாக
நகரம் நகரமாக அலைந்துதான்
நமது இல்லத்துக்கு
திரும்ப வேண்டும்.
பரிச்சயமற்ற மக்கள் நிறைந்த
இந்நகரத்தில்
இரவை நோக்கி
பகலைச் சுமந்திழுக்க வேண்டியிருக்கிறது
இவர் அவர் என்றில்லாமல்
எல்லாரிடமும்
பேச்சுகொடுக்கும் நிலைமைதான் என்ன?
வாதை மற்றும் துயரின் இரவு
பேரிடர் கொடுப்பது.
அதைச் சமாளித்தாலும்
அதற்கு எது எல்லை?
வரம்புதான் என்ன?
ஒரேயொருமுறைதான் வருமெனில்
சாவதொன்றும் கொடூரம் அல்ல.
Comments