எனது வலி, சத்தமில்லாத இசை
எனது இருப்பு, பெயரற்ற ஓர் அணு
எனது வலிக்கு வார்த்தைகள்
அளிக்கப்பட்டால்
எனது பெயரை நான் அறிந்துகொள்வேன்
நான் இருக்கும் இடங்களை
தெரிந்துகொள்வேன்
எனதிந்த இருப்புதான் என்ன?
இந்த பூமியைச் சுற்றவைப்பது
எதுவென்று
ஒரு குறிப்புகொடுங்கள் போதும்
தெரிந்துகொள்வேன்
அந்த ரகசியத்தை நானே தோண்டினால்
எனது மௌனத்துக்கு உச்சரிப்பு கிடைக்கும்
நான்
பிரபஞ்சத்தை இயக்கும் இறைவன் ஆவேன்
ஈருலகின் செல்வங்களையும்
அடைவேன்.
Comments
அருமையான கவிதை....