Skip to main content

உனது அழகுக்கு வந்தனம் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

 


உன் அழகுக்கான

வந்தனங்களாக

பண்களை அமைக்கிறான் கவிஞன்

மொட்டை மாடியில்

உனது உடை வண்ணங்களாக

தெளிக்கப்பட்டுள்ளது

சிலவேளைகளில்

காலை ஒளிர்கிறது

அல்லது பிற்பகல் ஒளிர்கிறது

அல்லது 

மாலை ஒளிர்கிறது

அத்துடன் உன் கம்பீரத்தை

அந்த உடை 

அழகுபடுத்தும்போது

தோட்டத்தில்

சைப்ரஸ், பைன் மரங்கள்

புது நளினம் கொள்கின்றன

உனது அதரங்கள் மற்றும் முகத்தின்

பிரதிபலிப்பில்

இதயம் மதுக்குவளையில் அமிழும்போது

கஜல் பாடலின் கம்பளச்சுருள் அவிழ்கிறது.

உனது உள்ளங்கைகளில் மருதாணியின் வண்ணம்

பிரகாசத்தை இழக்காதிருக்கும்வரை

கவிதை என்னும் புதுப்பெண்ணை நேசிக்கும் கலை

இந்த உலகத்தில் இருக்கும்வரை

உன் அழகு

தன் இளமையின் ஆற்றலை இழக்காதிருக்கும்வரை

இந்த உலகம் என்மேல் கனிவுடன் இருக்கும்வரை

நீ மூச்சை இழுத்துக்கொண்டிருக்கும்வரை

தோழமை கொண்டிருக்கிறது நம் நிலத்தின் காற்று .

காலம் கடுமையாகலாம்

அதீதமான துரதிர்ஷ்ட வேளைகள் வரலாம்

அந்த வேளைகளின் கசப்பை

உனது நினைவு இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது.

Comments

Gorky noel said…
சிறப்பு
Gorky noel said…
கஜல் பாடலின் கம்பளச்சுருள் அவிழ்கிறது.✨