நான் அறிவேன்
அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை
வரையறுக்கப்பட்ட வருத்தங்களை
நான் அறிவேன்.
ஆனால்
நான் அவர்களைக் கவனிக்கிறேன்
அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன்.
அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை
நான் விரும்புகிறேன்
அதுவே ரொம்ப.
அவர்கள் புகார் சொல்கின்றனர்
ஆனால் கவலைப்படுவதில்லை.
அவர்களின் மிடுக்கு நடை
ஆச்சரியகரமான கண்ணியம்.
மனிதர்களால்
சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில்
எளிமையாக
அவர்கள் உறங்குகின்றனர்.
நமது கண்களை விட
பூனைகளின் கண்கள்
அபரிதமிதமான அழகு கொண்டவை.
அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில்
உறங்கமுடியும்
எந்தத் தயக்கமும்
குற்றவுணர்வும் இன்றி.
நான் சோர்வாக உணரும்போதெல்லாம்
எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர
வேறெதுவும் செய்வதில்லை.
எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.
நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன்
அவர்களே எனது ஆசிரியர்கள்.
(சுஜாவுக்கு)
Comments