Skip to main content

யாசகன் - மிகெயில் லெர்மன்தோவ்


கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு இல்லம்

அதன் வாசலில்

ஒருவன் 

பசி, தாகம், வறுமையின் காரணமாக

நன்கொடை

கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் யாசகன்

குரூரமாய் ஒடுக்குதலுக்குள்ளானவன்.


அவன் ஒரு ரொட்டித் துண்டை மட்டுமே கேட்டான்

அவன் தோற்றத்தில் அத்தனை வேதனை

மெலிந்து, நலிந்து

அவன் நீட்டியிருக்கும் கரத்தில்

ஒரு கூழாங்கல்.


இப்படித்தான் நான் வீணே 

உன் நேசத்துக்காகப் பிரார்த்தித்தேன்

கசந்த கண்ணீர், ஏக்கம் மற்றும் உன்மத்தம் கொண்டு.

மகத்துவமாகச் செழித்திருந்த எனது புலன்கள் 

இப்படித்தான் 

உன்னால் என்றென்றைக்குமாகத் தண்டிக்கப்பட்டன.

Comments