உன் விருப்பம் என்னவென்று சொல் பெர்சி?
வெளியே மணல்பரப்பில் உட்கார்ந்து
உதயமாகும் நிலவைப் பார்க்கலாமென்று நினைக்கிறேன்
இன்றிரவு நிறைமதி.
நாங்கள் போகிறோம்
நிலவும் எழுகிறது, அதன் அபாரமான எழில்
என்னை நடுங்கவைக்கிறது
காலம் மற்றும் வெளியைப் பற்றி
என்னை யோசிக்கச் செய்கிறது
என் குறித்து என்னை அளவெடுக்கச் செய்கிறது.
ஒரு சிறுஅம்சம்
சொர்க்கத்தைத் தியானிக்கிறது
இப்படி நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.
நிலவின் முழுமையான இந்த அழகுக்காக
எத்தனை நன்றிக்கடன்பட்டவள் நான்
என்குறித்து நினைத்துக்கொண்டேன்
நேசிப்பதற்கு உலகம் எவ்வளவு செழுமையை
வைத்திருக்கிறதென்றும் வியந்தேன்.
அவ்வேளையில்
பெர்சி என் முன்னால்
கால்களை மடித்து அமர்ந்து
முகமுயர்த்தி
என் முகத்துக்குள் ஆழமாக நோக்குகிறது
முழுமையும் அற்புதமும் துலங்கும் அந்த நிலவைப் போல்
நான் இருக்கக்கூடும்.
Comments
எத்தனை நன்றிக்கடன்பட்டவள் நான்// ❤️