ஒரு குட்டி நாய் குட்டிநாய்தான்
குட்டிநாய்தான்
ஒரு கூடையில்
கொத்தாக மற்ற நாய்க்குட்டிகளுடன்
அவன் இருக்கக்கூடும்.
அதையடுத்து
அவன் சற்றே மூத்தவன்
அத்துடன்
ஒரு பிடி ஏக்கம்
தவிர
அவன் வேறெதுவும் இல்லை.
அதை அவனால் புரிந்துகொள்ளவும் இயலாது.
அப்புறம்
யாரோ ஒருவர் அவனைத் தேர்ந்தெடுத்துவிட்டு
சொல்லவும் செய்கிறார்
“எனக்கு இது வேண்டும்.”
Comments