இரவின் முகத்திரையின் வழியாக அவை தொடர்ந்து கசிகின்றன
இப்போது தான் பிறந்த
விண்வெளிக்கூட்ட சிசுக்களிலிருந்து நட்சத்திரங்கள்
அழத் தொடங்குகின்றன.
கிரணம் நிகழ்ந்த பிறகு உதிரி நட்சத்திரங்கள் எதுவும் இருப்பதில்லை
நட்சத்திரங்களே, நீங்கள் எப்படி நொய்மையாக இருக்க முடியும்?
வைகறை வரை என்னுடன் விழித்திருக்கும் உங்களுக்கு
நான் மிகவும் நன்றிக்கடன்பட்டவன்
உங்களுடன் நானும் உறங்கத் தயாராக இருக்கிறேன்
நட்சத்திரங்களே!
கடவுள் உன்னில் சூரியனின் தீக்கதிர்களை விதைக்கிறாரெனில்
உன் காரணமாகத்தான்
முழு இரவும்
இந்த உலகம் நட்சத்திரங்களை அறுவடை செய்யப் போகிறது
ஷாகித்.
Comments