காலை எட்டரை மணி
அகாலத்தில்
பேக்கரிக்கு வந்து
பிரட் ஆம்லெட் சாப்பிடும் யுவதிக்கு
கடையில் ஒதுங்குவதற்கு
கீற்றளவு நிழல் இல்லை
அந்தப் பொன் சுடரும் முகத்தின் சிறுபருக்களில்
செவ்வரி ஏறியிருக்கும்
அவளுக்கு
கூரை தர வக்கில்லை
அம்மண வெயிலால்
அவசரமாய் வந்து அடிக்கிறது
விவஸ்தை கெட்ட சூரியன்
அவளை நிதானமாய்
நான் எங்கிருந்து பார்க்க இயலும்
அதற்கு இந்த உலகத்தில்
இப்போது
ஓர் இடம் இல்லை
ஒரு நிழல் இல்லை
ஒரு மலை இல்லை
ஒரு மரம் இல்லை.
Comments