Skip to main content

பிறப்பின் கதை


பிறக்கும்
கதையைத் தான்
நான் துவக்கத்திலிருந்து
பாடிக் கொண்டிருக்கிறேன் 
மிகச் சிறியதாகப் பிறந்த
பலவற்றின் கதைகள் அவை

அன்பின் முலையிலிருந்து 
அன்பற்ற முலை
சந்தோஷத்தின் முலையிலிருந்து 
துக்கத்தின் முலை
கூடலின் முலையிலிருந்து 
விடைதரும்
பிரிவின் முலை

அத்தனையும் பிறக்கிறது

இங்கே ஒன்றைத் தொட்டால்
இரண்டாகப் பிறக்காத எதையுமே
நான் இதுவரை கேட்டதேயில்லை

பேத அபேத!

Comments

anamikaana said…
இங்கே ஒன்றைத் தொட்டால்
இரண்டாகப் பிறக்காத எதையுமே
நான் இதுவரை கேட்டதில்லை..

நல்லாருக்கு