Skip to main content

அனாதை

 


பெரும் மோதல்கள்
யுத்த பிரகடனங்கள் 
குரைப்புகளுக்கிடையே
ஒரு நாய்
தன் குட்டியை
தரையில் இட்டுவிடுகிறது
நேற்றோ
முந்தைய தினமோ
பிறந்த அது
தன் குட்டி குண்டு பாதங்களால்
நடைபயிலத் தொடங்குகிறது
புலியாக
பன்றியாக
பூனையாக
குதிரையாக
அது பயிலத் தொடங்கி
எல்லாரையும் உள்ளே சேர்த்துக் கொண்டு
அந்தக் குட்டி
ஒரு நாயாக வேண்டும்

அதை நானும் நீங்களும் அனுமதிக்க வேண்டும்
அதுவரையில்
நிர்க்கதியின் குருட்டுச் சந்தில் நின்றுகொண்டு
அந்த அம்மா
தரையில் விழுந்த விட்ட
தன் குட்டியின் 
வால் தொடங்கும் கணுவில்
நாக்கால்
நக்கிக் கொடுக்கும் போது
அம்மா
அந்தக் குழந்தையுடன்
சேர்ந்து
நானும் அனாதை ஆகிவிடுகிறேன்.

(முஸ்கானுக்கு)

Comments

ianthiaoakley said…
Hotel Casino & Spa - Las Vegas - MapYRO
Welcome to a fun, 남원 출장샵 friendly casino. Book a hotel near the Casino at 3401 Las 동두천 출장샵 Vegas Blvd S in Las Vegas, 울산광역 출장샵 NV. Hotel Casino & Spa is 포항 출장샵 a luxury 고양 출장안마 hotel on the Las Vegas