Skip to main content

வீடுகள் - ஆஹா சாகித் அலி




அந்த மனிதன் தனது வீட்டை மணலில் புதைக்கிறான்
ஒவ்வொரு மாலையிலும் அதைத் தோண்டி வெளியே எடுக்கிறான் சீக்கிரமாகவே அதைத் திரும்பவும் கச்சிதமாக வைப்பதற்கு கற்றபடி
அத்துடன்
அத்தனை வேகத்தில் வெளியே எடுக்கவும்.


எனது பெற்றோர்கள் இருளில் குழந்தைகளைப் போல உறங்குகின்றனர் அவர்கள் சுவாசிப்பதைக் கேட்கமுடியாத தொலைதூரத்தில் நான்
ஆனால் அவர்களது வீடு பாதுகாப்பாக இருப்பதாகவே ஞாபகம்
அத்துடன் நான் உறங்கவும் முடியும்
அந்த இரவின் கூந்தல்
கருப்பாகவும் அடர்த்தியாகவும்
எனது கைகளுள்.

எனது பெற்றோர்கள் இருளில் உறங்குகின்றனர்.
நிலவு எழும்போது, அந்த இரவின் கூந்தல்
எனது தோள்களில் நரை வெள்ளையாக மாறுகிறது.


நான் வீட்டிலிருந்து பதின்மூன்று ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருக்கிறேன். நான் இரவின் நிலவுக்கு தலைசீவிவிடுகிறேன்
எனது பெற்றோரோ குழந்தைகளைப் போல உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

"எனது தந்தை இறந்துவிட்டார்,” விதுர் எழுதுகிறான்,
"அத்துடன் எனது பகுதியில் உள்ள 
எனது பெற்றோர்கள் இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடு, எரிக்கப்பட்டு விட்டது."

கடிதத்தைத் தொடர்ந்து படிக்கிறேன்,
நான் விழித்தெழுந்தால்
எனது உடல் நீராக இருக்கும், தீயைப் பிரதிபலித்தபடி. 

Comments