நள்ளிரவு மதுவிடுதியில்
உனது
மூச்சு என் மீது சரிந்து
விழுந்தது.
உனது
புன்னகையின் நுனியில் நான்
சமநிலைப்படுத்திக் கொண்டேன்,
உனது
வார்த்தைகளைப் பற்றியபடியே
இருட்டுப்
படிகளில் ஏறினேன்.
கடும்
சிரத்தை,
மரணத்துக்காக
உனது அறைகலன் நேர்த்தியாக
வடிவமைக்கப்பட்டிருந்தது
கோட்டிக்கார
வெள்ளியால் பளபளப்பாக்கிய கத்தியை
நீ நிலவின் மேற்பரப்பில்
வைத்து
கூர்மையாக்கிக்
கொண்டாய்.
போதை நாக்குடன் கவிதையைப் பாடிய
நீ நேசத்துடன்
இருந்தாய்
நான்
நினைத்தேன் : கடைசியாக!
தற்போது
நான்
உள்ளும் புறமுமாக
உனது
நினைவில்
அலைந்து
திரிகிறேன்,
எங்கெ நான் போனாலும்
நான்
உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.
எனது
வறுமைகளுக்குள் என்னைச்
சுருக்கிக் கொண்டுவிட்டேன்
அத்துடன்
உன்னை
இருப்பதிலேயே
விலைமதிப்பு கொண்ட நீலத்துடனான
கடல்
எங்கே
இருக்கிறதோ
அந்த இன்னொரு
நாட்டின் நிம்மதியற்ற
கனவுக்குள்.
000
எனது
விரல்,
உனது
தொலைபேசி எண் அதன் நுனியில்
இரவுக்கு
டயல் செய்கிறது.
உனது
நகரமோ
எனது
கண்களில் அதன் விளக்குகள்
மரிக்க
என்னைத்
தொடர்கிறது.
Comments