Skip to main content

Posts

பிரம்மத்தின் சத்தம்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு வெதுவெதுப்பான உலர்ந்த பீங்கான் கோப்பையாக உணவுத்தட்டாக மேஜையில் இருக்கிறேன் அன்னம் பரிபாலிக்கப்படும் கறியும் குழம்பும் ஊற்றப்படும். இந்தப் பின்மதியத்தில் உழைத்துக் களைத்து பசியோடு உணவகத்தின் ஓர் ஓர நாற்காலியில் அமர்ந்து அவன் உண்டு சவைக்கும் சத்தம் இவ்வுலகின் ஆதிதாளம். பிரம்மமும் அவனும் பரஸ்பரம் முயங்கும் பரஸ்பரம் உண்டு விண்ணும் ஒலியோடு என்னையும் இணைத்துக் கொண்ட அந்தப் பீங்கான் பாத்திரங்கள் தாம் நான்.

(நகுலன்) இல்லாமல் இருப்பதன் இனிமை

 ஷங்கர்ராமசுப்ரமணியன் அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன; ஒரு பொருள் இன்னொரு பொருளாகிறது; ஒரு உயிர் இன்னொரு உயிராக மயங்குகிறது; உயிர் உயிரற்றது என்று சொல்லப்படும் எல்லைகள் குழம்புகின்றன; பொழுதுகளும் பருவங்களும் மயங்குகின்றன; உரையாடலின்போது தனித்தனிச் சுயங்கள் கரைகின்றன. தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் இந்த உருமாற்றங்களையும் மயக்கத்தையும் ஒரு ‘சொரூப’ நிலையாகத் தன் கவிதைகளிலும் உரைநடையிலும் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறார். இயற்கையும் மனிதனும் வேறு வேறு என்று நவீன மனிதன் பாவிக்கிறான். ‘சுயம்’ என்றும் ‘தான்’ என்றும் தனித்து அவன் கொள்ளும் லட்சியங்களும் கனவுகளும் கனத்துச் சலிக்கின்றன. இதைத் தன் படைப்புகளில் தொடர்ந்து தெரியப்படுத்தியவர் நகுலன். தந்தை, அதிகாரி, கணவன், வியாபாரி, நிர்வாகி, ஆட்சியாளன் என லௌகீக வாழ்வில் தான் வகிக்கும் பாத்திரங்களையே திடமான சுயங்களாக வரித்துக்கொள்ளும் மனிதன், அவற்றாலேயே விழுங்கப்படுகிறான். இதை மனித உயிரின் தோல்வியாகப் பார்க்கிறார் நகுலன். இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது எல்லாம் நகர்ந்துகொண்டு இருக்கின்றன. முந்தைய உருவை ...

(ராம் கோபால் வர்மா) சைக்கோவுக்கு 50 வயது

 தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் 1960 க்கு முன்பு ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ வெளிவரும்வரை யாரும் குளியலறை ஷவரில் குளிப்பதற்கு அச்சப்பட்டிருக்கவே மாட்டார்கள். அன்றாட குளியல் சடங்கை, கொலைக்கான, சரியான பின்னணியாக சைக்கோ திரைப்படம் மாற்றியது. அந்த திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், அதே பாணியிலான எண்ணற்ற திரைப்படங்களை நாம் பார்த்துவிட்டாலும் ஒவ்வொரு சினிமா ரசிகனின் பிரக்ஞையிலும் சைக்கோவின் தாக்கம் இன்னும் மறையாமல் இருக்கிறது. சைக்கோ திரைப்படம் பற்றிய எனது முதல் நினைவு இதுதான். வீட்டிலும் பள்ளியிலும் நான் செல்லும் அனைத்து இடங்களிலும் சைக்கோ பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அத்திரைப்படம் பார்த்த கிளர்ச்சியுடன், யாருக்காவது தனியாகப் பார்ப்பதற்கு துணிச்சல் உண்டா என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர்.  சைக்கோ வெளிவந்து 22 வருடங்களுக்குப் பிறகு சைக்கோவின் இரண்டாம் பாகத்திற்கான சுவரொட்டியைப் பார்த்தேன். அந்த சுவரோட்டியில் சைக்கோவில் வரும் வீடு ஒளிநிழலில் இருக்குமாறு  அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தலைப்பின் கீழ் துணைத்தலைப்பாக, "...

எனது ஸ்ரீ - ராம் கோபால் வர்மா

 தமிழில்: ஷங்கர்   விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீதேவி நடித்த புதிய படம் வெளியாகும் போதெல்லாம் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும்போது திரையரங்கின் வெளியே உள்ள விளம்பரத்தட்டிகளில் அவரது படத்தை அண்ணாந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். அவரது அழகும் கவர்ச்சியும் மிக வலிமையானது. அவரிடம் இருந்த நடிகையை பார்வையாளர்களும் திரையுலகமும் தெரிந்து கண்டு உணர்வதற்கு நிறைய நிறைய வருடங்களும் படங்களும் தேவைப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் உள்ள நடிகையை மிகச்சரியான முறையில் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் சேகர் கபூர் தான் வெளிப்படுத்தினார். அவர் ஆரம்பகாலங்களில் நடித்த படங்களிலேயே அவரது நடிப்புத்திறன் நன்கு வெளிப்பட்டிருக்கும். மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் புதிய ஸ்ரீதேவியை அடையாளம் கண்டனர். சேகர் கபூரின் அழகியல், அவரது அபாரமான அழகு மற்றும் நம்பமுடியாத நடிப்புத்திறன் இரண்டையுமே வெளிக்கொண்டு வந்தது. நான் எனது முதல்படமான சிவா(உதயம்) திரைப்படத்துக்கான வேலையில் இருந்தபோது ஸ்ரீதேவியுடனான எனது பயணம...

நீ புலிதான் நீ புலிதான்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எத்தனை லட்சம் வருஷங்கள் ஆகிவிட்டன இன்னும் என் வீட்டின் இரும்பு கேட்டிற்குள் நுழையும் போது பூனை தயங்கி நின்று காதை வாலை உயர்த்தி மௌனமாய் சுற்றுமுற்றும் நோட்டமிடுகிறது கம்பிகளுக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கிறது இதயத்திலும் ரோமத்திலும் புதிதாகப் பிறந்த விழிப்பு என் வீடு என் தெரு என் தோட்டம் என்று சொல்லப்படும் உன் காட்டில் உன் உடலை நீட்டு நீ புலிதான் நீ புலிதான் என்று இரைச்சலிடுகிறது எனது விழிப்பு.

(ஏ.ஆர். ரஹ்மான்-50) விடுதலையென்றால் எல்லா விடுதலையும்தான்

ஷங்கர்ராமசுப்ரமணியன் திருநெல்வேலிக்குப் போகும்போதும், தமிழகத்தின் சிற்றூர்களில் பயணம் செய்ய வாய்க்கும்போதும் பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்களை ரொம்ப காலமாகவே கவனித்துவருகிறேன். பெருங்களத்தூர் தாண்டியவுடன் தேநீரின் ருசி மாறுவதைப் போலவே இளையராஜாவுக்குள் உருமாறிவிடுகிறது தமிழகம். இளையராஜாவைத் தவிர்த்து தேவா தொடங்கி இன்றைய இமான், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்களும் ஒலிக்கப்படுகின்றன என்றாலும் இளையராஜா காலத்திய உணர்வு மதிப்பீடுகளையே கொண்டிருக்கும் இசையே கேட்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் கிராமங்கள் வரை பரவிவிட்ட காலத்திலும் எண்பதுகள் காலகட்ட மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும் காதல், காத்திருப்பு, ஏக்கம், தாபம், காதல் தோல்வி அளிக்கும் புலம்பல் மற்றும் சல்லாபப் பாடல்கள்தான் இன்றும் பேருந்துகளில் காலையிலும் மாலையிலும் ரசிக்கப்படுகின்றன. கிராமிய, வேளாண் கலாசாரப் பெருமிதங்கள், மண்ணின் பெருமை, தாய்மையின் மீதான புனிதம் ஆகியவை மதிய வேளைப் பயணங்களை நிறைக்கின்றன. இந்தியாவில் வேகமாக நகர்மயமாகிவிட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், உலகமயமாதலின் அத்தனை சாதகங்களையும் சுகித்துவரும் ஒரு நிலத்தின் சிறுநகரங...

ஷ்ரோடிங்கரின் பூனை நகுலனைத் திறக்கிறது!

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு பொருள் என்ன நிலையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியாத நிலையில், குவாண்டம் கோட்பாடு அதை 'இருநிலை இருப்பு' என்று அழைக்கிறது. அது என்னவாக இருக்கிறது என்று பார்க்காத வரை அதற்கு எல்லா நிலைகளும் சாத்தியம். ஆணாக, பெண்ணாக, இருபாலுயிரியாக, யாரும் பார்க்காத வரை எல்லா நிலைகளும் சாத்தியம். புகழ்பெற்ற விஞ்ஞானியான எர்வின் ஷ்ரோடிங்கர், ஒரு சோதனையைக் கற்பிதம் செய்தார். அதன்படி, ஒரு இரும்புப் பெட்டிக்குள் பூனையையும் ஹைட்ரோசயனிக் அமிலக் குப்பி ஒன்றையும் வைக்க வேண்டும். அத்துடன் கதிரியக்கத்தன்மை கொண்ட பொருளையும் வைக்க வேண்டும். பரிசோதனையின்போது, அந்தக் கதிரியக்கப் பொருளின் ஒரு அணு சீர்கெட்டாலும், அது அந்த இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சுத்தியலை அசைத்து, அமிலக் குப்பியை உடைக்கும். அமிலக் குப்பி கசிந்தால் பூனை இறந்துவிடும். ஆனால், அந்த இரும்புப் பெட்டி மூடியிருக்கும் நிலையில் பூனை உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவே தெரியாது. குவாண்டம் விதியின்படி, பூனை உயிருடனும் இருக்கலாம்; இறந்தும் இருக்கலாம் என்ற 'இருநிலை இருப்பு நிலை'யில் உள்ளது....