Skip to main content

Posts

என்ன பெயர் ப்ரவுனி?

இந்த உலகில் சமீபத்தில் பிறந்த மலர் உன் கண்கள் அந்தக் கண்களை அழகாக்கும் வஸ்து உனது சீவன் அந்தச் சீவன் உன்னை ப்ரவுனியாக்குகிறது அந்தச் சீவன் உன்னையும் என்னையும் வேறாக்குகிறது மிகச் சில கணங்கள் தான்  உன் கண்ணும் என் கண்ணும் ஒன்றாகும் போது உனதும் எனதும் குவிந்து பூக்கும்  அந்த மலருக்கு  என்ன பெயர் ப்ரவுனி?

அபி ஊர்

  சென்னையில் நான் பார்த்திராத அபூர்வக் காட்சி அது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகான நாள். ப்ரவுனியை சாயங்கால நடைக்கு அழைத்துச் செல்லும் சீதாபதி நகர் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் முனையில், ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இன்றுவரை இயங்காத இஸ்திரி வண்டிக்குப் பக்கவாட்டில் இருக்கும சிமெண்ட் பலகை இருக்கையில் மூன்று மூதாட்டிகள் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்கள். யார் வீட்டுக்கும் சொந்தமில்லாமல், வேப்பமரத்தின் நிழலில் அமைந்திருக்கும் இருக்கை அது. மூன்று பாட்டிகளும் வெற்றிலை போட்டு சாயங்காலத்துக்குள் விரைந்து கொண்டிருக்கும் பொழுதில் சன்னமாக ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீடுகளில் பணிசெய்யும் மூதாட்டிகள் அவர்கள். இருக்கையின் ஓரத்தில் பையில் கரும்பு இருந்தது. அவர்கள் முகங்களில் இருந்த சுருக்க ரேகைகளும் மூக்குத்தியும் அசைபோடும் வாயும் வேப்பமரமும் சேர்ந்து அங்கு ஏற்படுத்தியிருந்த அமைதியும் அந்த இடத்தை விச்ராந்தியாக  ஆக்கியிருந்தது. அந்த மூன்று பெண்களும் வேப்பமரமும் அதிலிருந்து உதிர்ந்த இலைகள் படிந்த தெருவும் படர்ந்து கொண்டிருந்த மாலையும் நகரத்துக்கு வெளியே இருப்பதாக எனக்குத் தோன்றியது...

ரோஜாவின் பாதைகள் முடிவற்றது சூர்யா

மொழியின் மாபெரும் ஆரவாரத்துக்கு இடையே பகட்டு ஆபரண சரசரப்புகளுக்கு மத்தியில் ஒரு அமைதி அமர்ந்திருக்கும் உணர்வைத் தருபவை வே. நி. சூர்யாவின் கவிதைள். மிக எளிமையானதும் மிக அபூர்வமானதுமாக இருக்கும், ஆதியிலிருந்து கவிதை அடையத் துடிக்கும் இடங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் வசிப்பதற்குத் துணிச்சலாக வந்து சேர்ந்திருப்பவர் வே. நி. சூர்யா. அவர் எழுதுபவற்றை எனக்கு உடனுக்குடன் படிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கியிருக்கிறார்.  நேற்று அவரிடம் இருந்து வந்த கவிதையைப் படித்தபோது, கவிதையின் மையப் படிமமாக இருக்கும் ரோஜாவை வேறொன்றாக இடம் மாற்ற முடியுமா என்று திரும்பத் திரும்பப் படித்து யோசித்துப் பார்த்தேன். உலகிலேயே பலவீனமான ரோஜாவாகவே அது சூர்யாவின் கவிதையில் இடம்பிடிக்கிறது.  ஞாபத்தின் துயர் தந்த சுகவீனத்திலிருந்து பலவீனமாக ஆகியிருக்கும் ரோஜா தான் அது. அது பலவீன ரோஜா மட்டுமல்ல. திரும்பத் திரும்ப மொழியில் கவிதையில் பயன்படுத்தப்பட்டு தேய்க்கப்பட்ட ரோஜாவும் கூட.  எனக்கு ரோஜாவை இந்தக் கவிதையிலிருந்து இடம்பெயர்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால், பலவீனமாகத் தெரிந்தாலும் இந்தக் கவிதையின் ஆதாரத...

இதயத்தில் எழுந்து இதயத்தில் படியும் தூசுகள்

இயல்பிலிருந்து அதீதம்; சாதாரணத்திலிருந்து பயங்கரம்; எதார்த்தத்திலிருந்து அற்புதம் எனச் சுருக்கமான மூன்று விவரணைகளில் மராத்திய, ஆங்கில எழுத்தாளர் விலாஸ் சாரங்கின் கதைசொல்லும் குணத்தைச் சுட்டிவிடலாம். மராத்திய புதுக்கவிதைகள் இயக்கத்திலும் பங்குபெற்றவர் விலாஸ் சாரங்க். புத்தரின் சரிதையையொட்டி இவர் எழுதி தமிழிலும் ஏற்கெனவே வெளியாகியுள்ள 'தம்மம் தந்தவன்' நாவலை ஒரு கவிஞனின் சாதகமான அம்சங்களை உட்கொண்ட நாவல் என்று சொல்ல முடியும். 'கூண்டுக்குள் பெண்கள்' சிறுகதைகளில் பெரும்பாலானவை பழைய பம்பாயில் நிகழ்பவை. பம்பாயின் யாசகர்கள், பாலியல் தொழிலாளர்கள், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடத்தை, ஆசாபாசங்களை, நிராசைகளை, ஏக்கதாபங்களை சாதாரணம் போலத் தொனிக்கும் மொழியில் ஆனால் வன்மையாகச் சொல்வதில் விலாஸ் சாரங் தமிழ் சிறுகதைக் கலைஞர் அசோகமித்திரனை ஞாபகப்படுத்துபவர். மிக எதார்த்தமாகக் கதையை உழுதுகொண்டிருக்கும் போதே மையத்தில் ஒரு அற்புதத்தை, அதிசயத்தை உருவாக்கிவிடுகிறார். அப்படி விலாஸ் சாரங்க் உருவாக்கும் அதிசயம் அல்லது அற்புதம் ஒரு கவித்துவப் படிமமாக ஆகி, வாசிப்பவருக்கு ஒரு புராணக்கதையை வாசிக்க...

எனக்கெதற்கு பற்ற ஒரு கரம் எனக்கெதற்கு அள்ள ஒரு முகம்

இருண்ட நெடுஞ்சாலையின் விளக்குகளை சுடரவைக்கும் உனது குரல் ஒரு உறக்கமற்ற இரவில்தான் எனக்குப் பரிச்சயமானது எல்விஸ் பிரஸ்லி ‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை என்பதனால்’.   தனிமை சூழ்ந்தறையும் இருளில் தொலைவில் வெளிச்ச ஜன்னலாய் ஆதுரம் காட்டும் ஒரு மாடி அறை சற்று தூரம் கடந்தால் தொடங்கிவிடக்கூடிய காதலின் ஆதுர நிலப்பரப்பு  அதை நோக்கி  நான் பயணிக்கும் மகிழுந்து  உன் குரல் எல்விஸ் பிரஸ்லி ‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை என்பதனால்’  ‘உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை என்பதனால்’ தசைகளெங்கும் வலியாய் கனக்கும் தனித்த அந்த இரவில் நேசத்தின் பாடலை ஒற்றையாகவே பராமரிக்கும் ரகசியப் பேழையை உன் குரலிலிருந்து பரிசாகப் பெற்றேன் எல்விஸ் பிரஸ்லி ‘நான் இங்கே தரிக்கலாமா? உன்னுடன் காதலில் விழுவதைத் தவிர வழியில்லாமல் போனால் அது பாவம் ஆகிவிடுமா என்ன?’ ஒரு ராஜகூடலுக்கு இட்டுச்செல்லும் கம்பீர நெடுஞ்சாலை  முயக்கத்தின்போது அவள் முகத்தில் தோன்றும் எண்ணெய் மினுமினுப்பை வானத்திலிருந்து இறங்கும் விளக்குகளாக்கும் உன்...

இயற்கை வரலாற்றில் செந்தடம் பதித்த ரோமுலஸ்

உயிரின வகைகளிலேயே பாம்புகளும், பிற ஊர்வன வகை உயிரினங்களும்தான் பொதுவாக மக்களிடம் அச்சத்தையும் விலக்கத்தையும் வெறுப்பையும் அதிகம் பெற்றவை. அதனாலேயே அவை அவர்களது அன்றாட எதார்த்தத்தில் இருந்தாலும் கட்டுக்கதைகளாகவும் புராணிகமாகவும் கடவுளர்களாகவும் இன்னொரு தளத்திலும் புழங்குபவை. தெய்வீகமாகவும் தொன்ம அடையாளமாகவும் இருக்கும் அதே வேளையில் அவை மனிதர்களின் வேட்டைக்கும் வன்முறைக்கும் தொடர்ந்து இலக்காகுபவை. பாம்புகள் மீது படிந்திருக்கும் அச்சத்தையும் அமானுஷத்தையும் தகர்த்து அவையும் நம்மைப் போன்ற உயிர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்கியவரே இந்தியாவின் பாம்பு மனிதன் என்றழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர். ஏராளமான முறை பாம்புக்கடி பட்டு, ஒரு கட்டைவிரலின் செயல்பாட்டையே இழந்த ரோமுலஸ் விட்டேகர், தனது உடலையே நஞ்சு எதிர்ப்பு மண்டலமாகப் படிப்படியாக மாற்றிக்கொண்டவர். உலகிலேயே அதிக பயத்தை அளிக்கும் பாம்புகளின் கண்களைப் பார்த்துப் பழகி அதை அன்றாடம் ஆக்கிக்கொண்டிருக்கும் சுவாரசியமான மனிதரின் கதை இந்தப் புத்தகம் வழியாக நம் முன் விரிகிறது. தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட அந்த அமெரிக்கச் சிறுவன் ரோமுலஸ...

பிறப்பின் சத்தம் கேட்கவில்லையா நண்பர்களே

காவ்யா வெளியிட்ட ‘நகுலன் கவிதைகள்’ தொகுப்பை மறுபடி மறுபடி புரட்டி முழுக்கவே எத்தனையோ முறை படித்திருக்கிறேன் . வேறு வேறு சூழல்கள் , மனநிலைகளுக்கேற்ப தனித்தனியே சில கவிதைகளையும் அடிக்கடிப் போய்ப் பார்த்திருக்கிறேன் . ஒருகட்டத்தில் நகுல னின் கவிதைகளில் இல்லாத பழமையும் பழக்கத்தின் அலுப்பும் பதிப்பில் தெரியத் தொடங்கியதையடுத்து நகுலன் இருந்தபோது வெளியிட்ட தனித்தனித் தொகுதிகளைப் படித்துப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது . நண்பர் அழகியசிங்கரைத் தொடர்பு கொண்டு அவர் பதிப்பித்த ‘இரு நீண்ட கவிதைகள்’ நூலைக் கேட்க முடிவுசெய்தேன் . அவரிடம் ‘சுருதி’ தொகுப்பு இருப்பதாகவும் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி உடனடியாக அனுப்பியும் வைத்தார் . நகுலன் கவிதையைச் சுற்றி உணரும் வெளியைப் பக்கங்களிலும் கொண்டு ஆதிமூலத்தின் அட்டைப்படத்துடன் நேர்த்தியாக வெளிவந்த தொகுதி அது . நகுலனின் கவிதைகளைப் புதிதாகப் படிக்கும் அனுபவத்தை இந்தத் தொகுதியில் உணர்ந்தேன் . தபாலில் வந்த சுருதி புத்தகத்தைத் திறந்தவுடன் வெளிப்பட்ட கவிதை ‘இடையில்’ என்ற தலைப்புடன் கண்ணில் பட்டது . “ ஏன் இப்படிக் குடிக்கிறீர்கள் ?” என்று கேட்டான் “ ஏன் இப்படி வா...