இந்த உலகில் சமீபத்தில் பிறந்த மலர்
உன் கண்கள்
அந்தக் கண்களை அழகாக்கும் வஸ்து
உனது சீவன்
அந்தச் சீவன் உன்னை ப்ரவுனியாக்குகிறது
அந்தச் சீவன்
உன்னையும் என்னையும்
வேறாக்குகிறது
மிகச் சில கணங்கள் தான்
உன் கண்ணும் என் கண்ணும் ஒன்றாகும்
போது
உனதும் எனதும் குவிந்து பூக்கும்
அந்த மலருக்கு
என்ன பெயர் ப்ரவுனி?
Comments