Skip to main content

Posts

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘சீமுர்க்’

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும்,  மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை.  சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம். போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார். இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது.  மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது. மூளை நரம்பிய...

அனோஜனின் ‘தீக்குடுக்கை’

ஈழத்தைச் சேர்ந்த இளம் சிறுகதை ஆசிரியராக எனக்குப் பெயரளவில் பரிச்சயமான அனோஜன், அகழ் இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். நண்பர் விஷால் ராஜா வழியாக தொலைபேசியில் உரையாடத் தொடங்கி, தொடர் பேச்சுகள், சில நேரடி சந்திப்புகள் வழியாக நெருக்கத்துக்குரிய நண்பராகவும் ஆகிவிட்டவர். தனது முதல் நாவலுக்கான ஊக்கத்தை எனது கட்டுரையொன்றின் வாயிலாகப் பெற்றதாக தனது நாவலுக்கான முன்னுரைக் குறிப்பில் எழுதியுள்ளதைப் பார்த்தபோது கூடுதல் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எனது இணையத்தளம் போக, எனது எழுத்துகளைத் தொடர்ந்து வெளியிடும் மேடையாக இருந்துவரும் அகழ் தொடர்பிலான உறவு விஷால், அனோஜனுடனான தொடரும் நட்பு, உரையாடல், தகராறுகளின் இணைச் செயல்பாடும்தான். இந்தப் புத்தகத் திருவிழாவில் சால்ட் பதிப்பகம் வெளியிட்ட அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் நாவலான ‘தீக்குடுக்கை’க்கு பின் அட்டைக் குறிப்பாக எழுதியது இது. 000 அகத்திலும் புறத்திலும் போர்களும் பிளவுகளும் முரண்பாடுகளும் கூச்சலிடும் ஒரு நூற்றாண்டில் கண்விழித்து, அந்தத் துர்க்கனவின் கோரத் தீண்டலுக்கும் அதனால் ஏற்பட்ட சிதைவுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் குழந்தைகள்தான்.மத்தியக் கிழக்கிலும் உக்ரைனிலு...

சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே – என் புத்தக அட்டையின் கதை

‘சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை, எனது தனித்தொகுதியான ‘ஞாபக சீதா’வில் இடம்பெற்றது.  மிக குறுகிய காலமே என்னை ஆட்கொண்டு, அந்த நாட்களை பொன்னில் சுடரேற்றி, சீக்கிரமே பிரிந்து சென்ற ஒருத்திக்கு, பிரிந்ததின் நினைவுப் பரிசாக, அதற்கு முன்னர் சில ஆண்டுகள் நான் சேகரித்திருந்த பொருட்களை, ஒரு கண்ணாடிக் குடுவையில் இட்டு அளித்தேன். நான் சேகரித்த கடல் சிப்பிகள், துங்கபத்ராவிலிருந்து கொண்டுவந்த கூழாங்கற்கள், திருநெல்வேலி கோயில் வாசலில் வாங்கிய சோளிகள், குட்டி பொம்மைகள் என அந்தக் குடுவையில் போட்டு அவளது பிறந்த தினம் தொடங்கும் நள்ளிரவில் பரிசளித்தேன். இதை ஒரு கவிதையாக எழுதுங்கள் என்று எனக்கு அக்காலத்தில் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் யோசனை கூறினார். அதன் விளைவே 'சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே' கவிதை. அவள் என்னிடமிருந்து தொலைந்து போய் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த தொகுதிக்கு ஒரு தலைப்பை வைப்பதற்கு ஆலோசித்தபோது, ‘சிறிய பொருள்களே சின்னஞ்சி...

மதாரின் குழந்தை

  சஜ்தாவில் குழந்தை - மதார்   தொழத் தெரியாத குழந்தை தொழுகையாளிகளின் வரிசையில் நிற்கிறது   தக்பீர் கட்டுகிறது சூரா ஓதுகிறது கேட்பதைச் சொல்லி செய்வதைப் பார்த்து   தொழுகை முடிந்து உருகி அழும் ஈமான் தாரியின் கண்ணீரை அதற்கு நடிக்கத் தெரியவில்லை . -             அகழ் இணைய இதழில் வெளியான மதார் கவிதைகளில்  ( https://akazhonline.com/?p=8605 )  ‘சஜ்தாவில் குழந்தை’ எனக்குத் திரும்ப வாசிக்கும்போதும் அதிர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது.      சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமான அனுபவத்தைத் தந்த படைப்பு இது. மதாரின் முதல் கவிதை தொகுதியான ‘வெயில் பறந்தது’ தொகுதி பரவலாக கவனிக்கப் பெற்றது.  சின்ன ஆச்சரியம், விந்தையவிழ்ப்பு, ஆரஞ்சு மிட்டாய், பஞ்சு மிட்டாயின் வடிவம், தித்திப்பு கொடுக்கும் சிறிய திளைப்பிலேயே ஆழ்ந்து திருப்தியடைபவராக மதார் எனக்குத் தோன்றினார். தமிழில் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட சாதனைகள் தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு மதார் புதுமையாக இருக்கக்கூடும் என்றே நண்பர்களிடம...

முதல் ரோஜா

கண்களில் ரத்தமேறி குணத்துக்கு எட்டாத தொலைவில் எரியும் ரணம் உறங்காமல் விழித்திருப்பது ஏன்? 000 நான்குமுனைச் சாலையின் நெரிசலில் பிதுங்கும் வாகனங்களின் சக்கரங்கள் ஏறாமல் ஓரப்பாதசாரிகளால் நெரிக்கப்படாமல் இரும்பு வடிகால் துளையின் மேல் துளிக்காயமின்றி கிழிசலோ வாடலோ இன்றி தூசுகூடப் படாமல் துடித்துக் கிடக்கிறது ரத்தச் சிவப்பில் முன்போ பின்போ இல்லாத முதல் ரோஜா. 000 இங்கே சமீபமாக கொலையோ சித்திரவதையோ புணர்ச்சியோ எதுவும் நடக்கவில்லை நேற்று மாற்றிய வெள்ளை படுக்கையில் குங்குமச் சிவப்பு மிளகாய் பழத்தின் பளபளப்புடன் விபரீதப் பூவாய் பூத்திருக்கிறது ஒரு துளி. (நன்றி: அகழ் இணைய இதழ்)

நண்பர் அரவிந்தன்

எதிர்  பிளாட்பாரத்தில் இறந்து இருண்டு கிடக்கும் எலியின் வாலருகே  மினுங்கிக்கொண்டிருக்கிறது அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு சாலையில் கால் வைக்க முடியவில்லை முன்னும் பின்னும் முரட்டு வாகனங்கள் இடைவேளை இன்றி ஒரு நாள் ஒரு நூற்றாண்டு பல நூற்றாண்டுகள் திடீர் இடைவெளியில் குறுக்காக ஓடி, ஏறினேன். எதிர் பிளாட்பாரத்தில் தவறிக் கிடக்கும் நீர்த் தாவரத்தின் கசிவில் மினுங்கிக் கொண்டிருக்கிறது, அன்பை விட சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு.  - தேவதச்சன் தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார்.  அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அன்புக்...

குயில்

நம் தாமச இருட்டுறக்கத்தின் போர்வையைத் துளைத்துக் கிழிக்க முயல்கிறது மீண்டும் மீண்டும் அந்தக் குயிலின் குரல். கதியற்றவர்கள் நாம் என்று அறியுமா அது. எங்கெல்லாம் வந்திறங்கித் தரிக்கிறோமோ அந்த இடமெல்லாம் கதியற்றது என்பதை  அறியுமா அது. மேலான ஒரு கிளையிலிருந்து எங்களைக் குரைத்தெழுப்புவதால் அதுவே ஒரு கதியற்ற பறவை என்றதற்குத் தெரியாமல் போகுமா?