Skip to main content

இரண்டு கானேஷன்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி




எனது காதல் இரண்டு கானேஷன் மலர்களைக் கொண்டுவந்தது

எனது காதல் என்னிடம் சிவப்பைக் கொண்டுவந்தது

எனது காதல் அவளை எனக்குக் கொண்டுவந்தது

எனது காதல் என்னை கவலைப்பட வேண்டாம் என்றது

எனது காதல் என்னைச் சாகவேண்டாம் என்றது

மேஜையில் உள்ள இரண்டு கானேஷன் மலர்கள் எனது காதல்

இரவுக்குள் கருமையடையும் ஒரு மாலையில்

ஷேன்பக்கின் இசையைக் கேட்கும்போது

எனது காதல் இளமையாய் இருக்கிறது

கானேஷன் மலர்கள் இருட்டில் கனல்கின்றன

வாதுமைகளின் ருசியை விட்டுவிட்டு அவள் போய்விட்டாள்

அவளது உடல் வாதுமைகளைப் போல ருசிப்பது.

இரண்டு கானேஷன் மலர்கள் சிவப்பாய் கனல்கின்றன

அவள் தொலைவில் எங்கோ அமர்ந்திருக்கும்போது

அவளது விரல்களுக்குள் மிருதுவாய் இருக்கும்

சீன நாய்களை அவள் கனவு  காணுகிறாள்

பத்தாயிரம் கானேஷன் மலர்கள் கனல்வது எனது காதல்

மரத்தின் கிளையில் அந்த அமைதியான தருணத்தில்

அமர்ந்திருக்கும் ஓசனிச்சிட்டு எனது காதல்

அவ்வேளை பதுங்கிவரும் பூனை.

Comments