எனக்கு மட்டுமே சொந்தமான படுக்கை ஒன்று உள்ளது
அது என்னுடைய அளவே இருக்கும்
சிலவேளை கண்களுக்குள் கனவுகளோடு
தனியாக உறங்க விரும்புகிறேன்
ஆனால் அவ்வப்போது
கனவுகள் இருண்மையாகவும் மூர்க்கமாகவும்
சஞ்சலம் உண்டாக்குவதாகவும் இருக்கும்
ஏனென்று காரணம் தெரியாவிட்டாலும்
நான் பயந்தெழுந்து விடுவேன்
அப்புறம் எனக்குத் தூக்கம் இருக்காது
மிக மந்தமாக மணிகள் கழியும்
அப்போது
நிலவின் ஒளி சுடரும் உன் முகம் இருக்கும்
படுக்கையில் நான் ஏறுகிறேன்
சீக்கிரம் விடியல் வந்துவிடும்
எனக்குத் தெரியும்
ஒவ்வொருவருக்கும் ஒரு பாதுகாப்பான இடம்
தேவைப்படுகிறது.
Comments