பிறக்கும்
கதையைத் தான்
நான் துவக்கத்திலிருந்து
பாடிக் கொண்டிருக்கிறேன்
மிகச் சிறியதாகப் பிறந்த
பலவற்றின் கதைகள் அவை
அன்பின் முலையிலிருந்து
அன்பற்ற முலை
சந்தோஷத்தின்
முலையிலிருந்து
துக்கத்தின்
முலை
கூடலின் முலையிலிருந்து
விடைதரும்
பிரிவின்
முலை
அத்தனையும்
பிறக்கிறது
இங்கே ஒன்றைத்
தொட்டால்
இரண்டாகப்
பிறக்காத எதையுமே
நான் இதுவரை கேட்டதேயில்லை
பேத அபேத!
Comments
இரண்டாகப் பிறக்காத எதையுமே
நான் இதுவரை கேட்டதில்லை..
நல்லாருக்கு