Skip to main content

குட்டி ஆந்தையே, அலறு - சார்லஸ் சிமிக்


நீ அங்கேதான் இருக்கிறாயா?

அங்கு என்ற ஒன்று நிஜமாகவே

அங்குள்ளதா என்ன?

உன் விருப்பப்படி

அலறு

அல்லது

அமைதியாய் இரு.

இருள்சூழ்ந்துள்ளது இரவு

இங்கே

நாம் இருப்பதைப் பார்த்து

பெரும் ஆச்சரியம் கொள்ள

தாமதமாக

நட்சத்திரங்கள் வரலாம்

அங்கே.

Comments