Skip to main content

யார்க் கடற்கரையில் - சார்லஸ் சிமிக்

 


டிசம்பரின் குளிர்ந்த சாயங்காலத்தில்

மகிழ்ச்சியற்றுப் போன

ஒரு காதல் ஜோடியை

மூழ்கடித்ததைப் பற்றி

பொருட்டே இல்லாதது போல

இந்த முரட்டு அலைகள்

கடுமை காட்டுகின்றன.

Comments