Skip to main content

கோடை அந்தி – சார்லஸ் சிமிக்


ஒரு நீண்ட பகலின் முடிவு

நியூயார்க் அல்லது ரோம்

ஏதோ ஒரு நகரத்தின் கூரைகள் மீது

வானில்

ஒளி இன்னும் மிஞ்சியிருக்கிறது

உஷ்ணத்தால் வீதிகள் காலியாகின்றன

மக்கள் குடிவந்த அறைகளிலும்

காலி அறைகளிலும்

நிழல்கள் நீண்டு இருட்டாக்குகின்றன

சிலர் விளக்கை ஏற்றுகின்றனர்

ஒவ்வொன்றும்

தன் எழிலில் தானே

விதிர்த்து நிற்கிறது

பலர்

விரைந்து நழுவும் இத்தருணத்தை ருசிப்பதற்காக

ஜன்னலுக்கு வருகின்றனர்.

என் வாழ்வின் நேசமாக

நீதான் இருந்துகொண்டிருக்கிறாய். 

Comments

Anonymous said…
மிகச்சிறந்த மொழியாக்கம்