Skip to main content

நான் எதையும் மறப்பதில்லை – சார்லஸ் சிமிக்

 


அதுதான் எனது சிக்கல்!

நகரத்தின் குப்பைக்குழியில்

கிழிந்த புகைப்படங்கள் நிரம்பிய

ஷூ டப்பாவை

பார்க்க வாய்த்ததைப் போல்.

ஏதோ ஒரு வெப்பமண்டலக் கடற்கரையில்

குளியல் உடையில்

பரஸ்பரம் கைகளைப் பிடித்தபடி நிற்கும்

ஒரு ஜோடியின்

புகைப்படத்தை மட்டும் எனக்கென்று 

எடுத்துக்கொண்டேன்.

அதில்

அவர்களது இளமையும் அழகும்

எவ்வளவு மிஞ்சியிருக்கிறதென்று

அவதானிக்கத் துரிதமாக முயல்கையில்

காற்று

அவர்களது தலை மற்றும் முகத்தை

அடித்துச் சென்றுவிட்டது.

Comments