நடுஇரவின் அமைதிக்குள்
தெருவில் இரைந்து உறுமுகிறது கார்
எரிபொருள் தொட்டியில் டினோசாரின் எலும்புகள்
சிலிர்த்து சடசடத்து இணைந்து
தனது பழைய காம்பீர்யத்தை எட்டின
இது அறியாது
வெளியே தெரியும்
எஃகு உடலைத் துரத்தி
பதறிக் குரைத்துத் துரத்தும் நாய்களின் சந்தடி
நாய்களுக்கும்
உறுமும்
டினோசாருக்கும்
நடுவில்.
Comments