இதற்கு முன் எந்த முட்டையையும் பார்த்ததில்லை
அதனால் இந்த முட்டையை எளிதாக உடைக்க முடியப் போவதில்லை
இந்த முட்டையைச் சூழ
ஓர் அமைதி
அரண் இட்டிருக்கிறது
அதன் ஓட்டை விடத்
திண்மையாக
வெளியே
ஆயுதங்கள் இடும்
பெருங்கூச்சல்களையெல்லாம்
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது
இந்த முட்டை மௌனமாக
தன்னை இட்ட உடலுக்கும்
தரைக்கும்
நடுவில்
ஓர் அந்தரத்தில்
சமைக்கப்பட்டது
அதன் வடிவம்
முட்டை.
Comments