எங்கே மனம் அச்சமின்றி தரிக்கிறதோ
எங்கே சிரம் உயர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக உலவுகிறதோ
குறுகிய உள்விவகாரச் சுவர்களால்
துண்டுகளாக உடையாமல் உலகம் எங்கே திகழ்கிறதோ
சத்தியத்தின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ
களைப்புறாத முயற்சி, தனது புஜங்களை
பரிபூரணத்தை நோக்கி எங்கே விரிக்கிறதோ
செத்த பழக்கத்தின் அசமந்தப் பாலை மணலில்
பகுத்தறிவின் தெள்ளிய ஓடை
எங்கே தன் வழியைத் தொலைக்காமல் பாய்கிறதோ
எப்போதும் விரியும் சிந்தனை, செயலுடன்
உன்னை
உன் மனம் எங்கே வழிநடத்துகிறதோ
விடுதலையின் அந்தச் சொர்க்கத்துக்குள்
என் தேசம் விழிக்கட்டும்
தந்தையே.
( கீதாஞ்சலி 35-வது பாடல்)
Comments