Skip to main content

ரப்பர் பந்து



கார் டயருக்கடியில் 

கிழியவில்லை

பிய்யவில்லை

ரப்பர் பந்து நசுங்கியிருக்கிறது 


இப்படி வசமாய்

விடுவிக்க முடியாதவாறு

நசுங்கியிருக்கும் பந்தை 

நான் இதுவரை பார்த்ததில்லை


எனினும்

நான் தொட்டபோது பந்திலிருக்கும்

விசை

நான் இருக்கிறேன்

என்றுணர்த்தி

என் உச்சந்தலை தீண்டியது.

Comments