Skip to main content

Posts

திருப்பாகம்

தி ருப்பாகம் என்ற பெயரை இட்டு இணையத்தில் தேடியபோதுதான், அது  அழிந்துவரும் பதார்த்தங்களில் ஒன்று என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு Sweet tooth ஏற்பட்டுள்ளதால் இருக்கலாம். இந்த மழைநாள் மாலையில், எங்கள் ஊர் திருநெல்வேலியின் ஞாபகங்களில் ஒன்றாக இருக்கும் திருப்பாகம் என்னும் இனிப்பை சாப்பிடவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. சில ஆசைகள் நிறைவேறிவிடக் கூடியவை. அடை,அவியல், சொதி போன்றவைகளைக் கூட அம்மாவை தொலைபேசியில் அழைத்து, அவள் கண்டபடி ஏசிக்கொண்டே கூறும் பக்குவத்தைக் கவனித்து, நாக்கின் நினைவிலிருக்கும் ருசியையும் மொழிபெயர்த்து கிட்டத்தட்ட திருநெல்வேலியை சென்னையில் உள்ள எங்கள் சமையலறைக்கு சில சமயங்களில் கொண்டுவந்து விடமுடியும்.  ஆனால் திருப்பாகம் என்னும் அரிய தெய்வீக இனிப்பைச் செய்வது சுலப சாத்தியமில்லை. தெய்வீக இனிப்பு என்று நான் சொல்வது மிகையாக இருக்கலாம். அதன் பெயரில் ஒரு மயக்கம் இருப்பதாக எண்ணலாம். ஆனால் திருப்பாகம் என்னும் பெயர் அந்த இனிப்புக்கு மிகவும் பொருத்தமானதே. ஆனால் திருப்பாகம் என்று சொல்லும்போது, சமயம், கோவில் தொடர்பான ஒரு உணர்வு எழுவதையும் தவிர்க்க முட...

படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது வளர்ப்பு மீன் தொட்டி அழுக்கடையும் போதும்,கலங்கியிருக்கும் தோறும் நான் பதற்றத்துக்குள்ளாகிறேன். நான் நம்பிக்கையில்லாமல், கலங்கிக் குழம்பும் வேளைகளிலும், எனது மீன்தொட்டியின் நீர் அழுகத் தொடங்குகிறது. மீன்களின் இயக்கம் நீரில் குறைகிறது. அவை மூச்சுவிடத் திணறுவதை நான் அனுபவிப்பேன். அதன் தலைகள் ரத்தச்சிவப்பை அடைகின்றன. எனது மீன்தொட்டியில் மூன்று தங்க மீன்கள் உள்ளன. ஒன்று மூத்தது, பெரியது. இரண்டு மீன்கள் குட்டிகள். அதில் எது ஆண், எது பெண் என்று எனக்குத் தெரியாது. நான் பெரிய மீனை அம்மா என்றும் குட்டிகளை குழந்தைகள் என்றும் கற்பிதம் செய்துள்ளேன். அம்மா மீனின் பெயர் மீனாட்சி. அதன் உடலை விட அதன் வால் பெரிதாக வளர்ந்துவிட்டது, என் கனவு, லட்சியங்கள், ஆசைகள் மற்றும் கற்பனைகளைப் போல வளர்ந்துவிட்டது. மீனின் உடலை விட நீளமான மெல்லிய வாலிழையின் நுட்பங்கள்தான் அழகாக இருக்கிறது, அதுவும் என் கனவைப் போலவும் லட்சியங்களைப் போலவும். நான் கொடுக்கும் உணவுத்துகள் மட்டுமே அந்த வாலுக்கு காரணமில்லை. மீனாட்சியின் வால் இழை வடிவமைப்பை ஒத்திருக்கும் வேறு தங்...

நகுலனின் தனித்திணை- அய்யப்ப பணிக்கர்

தமிழில் : ஷங்கர் ( சினிமா இயக்குநர் மற்றும் நண்பருமான தி.ஜா.பாண்டியராஜன் நகுலன் குறித்து எடுத்த விரைவில் வெளிவர இருக்கும் ‘நினைவுப்பாதையில் மஞ்சள் பூனை ’ ஆவணப்படத்தில், நகுலனின் ஆளுமை மற்றும் படைப்புகள் குறித்து மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் ஆங்கிலத்தில் பேசியது. நகுலனின் எழுத்துக்கள் பற்றி அவர் பேசிய சூழல் இப்போதும் மாறவில்லை என்ற நிலையில்... ) திரு.டி.கே.துரைசாமி, எனக்கு 45 ஆண்டுகளாக நண்பர். நான் அவரை முதலில் சந்தித்தபோது நகுலன் என்ற பெயரில் அறியப்படவில்லை. அவர் முதலில் ஆங்கிலத்தில்தான் அதிகமாக எழுதி வந்தார். மும்பையிலிருந்து வெளிவந்த இதழ் அது என்று நினைக்கிறேன். தாட் என்ற இதழில் அவர் தொடர்ந்து கவிதைகளை எழுதிவந்தார். அவரது ஆங்கில எழுத்துக்களை பிற இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பெரிதாகப் பொருட்படுத்தாதது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்போதே அவரது ஆங்கில எழுத்துகள் குறித்து பார்த்தசாரதி போன்றவர்களுடன் பேசியுள்ளேன். ஆனால் அதற்கு போதிய கவனம் கிடைக்கவில்லை. அவரது ஆங்கிலக் கவிதைகள் இப்போது தொகுக்கப்பட்டு புத்தகவடிவில் வந்தால் அதைப் புதிய வெளிச்சத்தில் வாசிக...

மனித வாழ்வு முழுவதையும் பகுத்தறிவு பொறுப்பில் எடுக்கமுடியாது- அசீஸ் நந்தி-3

தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் (ஈ ரானைச் சேர்ந்த தத்துவவாதி ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராக பயிற்சி செய்தவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி கூறுகிறார். மனித இயல்பிலும், பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பத்தை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார். காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி. வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாசாரத் தரப்புகள் வெறுப்போ,விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும், அதன் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும், விலக்குவதுமாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் இயல்பை நாம் பரிசீலிப்பது அவசியமானது. வெகுமக்களின் வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ‘உண்மையான ’ விருப்பை வெளிப்படுத்துகிறார் அசீஸ் நந...