Skip to main content

Posts

பேஹம் அக்தரின் நினைவில் - ஆஹா சாகித் அலி

1 ஒவ்வொரு செய்தித்தாளிலும் உனது மரணம்  சட்டகமிட்ட கருப்பு - வெள்ளைப் புகைப்படங்களாக  அஞ்சலிக் குறிப்புகளாக    வெதுவெதுப்பான , நீலமான , சாதா வானம்   உற்பாதம் நடந்த சுவடே இல்லாமல்   வரிகளுக்கிடையியே கூட தேம்புதல்களுக்கு   இடம் இல்லை . நான் உலகின் முடிவு குறித்து கதைக்க விரும்புகிறேன் . 2. இன்னும் உனது விரல்கள் பசிகொண்ட  பைரவியை அளக்கிறதா  அல்லது மண்போர்த்திய போர்வையை வெறுமனே  தொட்டுக்கொண்டிருக்கிறதா ? அந்த மரணம் தாங்கிய விதவை , கஜல்  இருண்ட அறைகளில் உன்னிலிருந்து மீளமுடியாமல்  அழுதுகொண்டிருக்கிறாள் வானத்தை அவநம்பிக்கை கொண்டு சூழும்  நிலவு நனைத்த வெண்ணிறத்தை  அவள் துயர் உடையாக அணிந்திருக்கிறாள்   காலிப் , மிர் , பெய்ஸ் ஆகியோரிடமிருந்து  தசாப்தங்களாகப் பக்குவம் பெற்ற ஸ்வரத்தைக் கொண்டு  பேரழிவுக்கு இறுதியாக பொலிவைக் கொடுத்துவிட்டாய் . ஸ்வரமற்ற ஒரு ராகத்தைக் கண்டுபிடிக்கிறேன் . 3 உன்னை குளிர்ந்த சேற்றுக்குள் நாடுகடத்தும்  மூடத்தனமும் வெள்ளைநிறமும் கொண்ட இந்தச் சவப்பேழை  தனது அறியாமையால் என்...

அறிவின் தோற்றம் பற்றிய விசாரணை

  நவீன இந்திய சமூக உருவாக்கத்தில் பங்களிப்பு செய்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் ஆராயப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் 1887 முதல் 1897 வரையிலான காலகட்டத்தில் நாராயண குரு, நவீன மனிதர்களின் மனப்போக்குக்குப் பதில் அளிக்கும் விதமாக, வேதாந்தத்தின் அடிப்படையில் எழுதிய பிரக்ஞையின் அறிவியலாக இந்த நூல் முக்கியமானது. நாராயண குருவின் வழிவந்த துறவியும் கேரளத்தின்  முன்னணி அறிஞர்களில் ஒருவருமான நித்ய சைதன்ய யதி, நாராயண குருவின் 15 பாடல்களுக்கும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தெளிவுரை ‘அறிவு - ஞானத்தின் ஆய்வியல் - நாராயண குரு’ என்ற நூலாகத் தமிழில் வெளிவந்திருப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும். திரும்பத் திரும்பப் படித்தும் விவாதித்தும் தெரிந்துகொள...

கோஸின்ட்சேவின் கிங் லியர் நாடகத்தை டெல்லியில் பார்த்துவிட்டு வரும்போது - ஆஹா சாகித் அலி

கொடீலியா உடைந்த மதில் சுவரில் தூக்கில் தொங்கும்போது லியர் ஓலமிடுகிறான் "நீங்கள் கல் மனிதர்கள்" பேரரசியும் அரசகுடிப் பெண்களும் சூடும் மல்லிகைப் பூக்கள் குவிந்திருந்த சாலையாக முன்பிருந்த சாந்தினி சௌக்குக்குள் நுழைகிறேன் வாசனைத் திரவியங்களை அவர்கள் இஸ்பஹானிலிருந்து வரவழைத்தார்கள் டாக்காவிலிருந்து துணிமணிகளும் காபூலிலிருந்து தைலங்களும் ஆக்ராவிலிருந்து கண்ணாடி வளையல்களும் வந்தன. இங்கே யாரும் அறியாமல் ஆகிவிட்ட பிரபுக்கள் மறக்கப்பட்ட துறவிகளின் சமாதிகளில் யாசகர்கள் தற்போது வசிக்கின்றனர் தெருவோர வியாபாரிகள் சீப்புகள் முகம் பார்க்கும் கண்ணாடிகளை சீக்கிய கோயிலுக்கு வெளியே விற்கின்றனர்.  தெருவுக்கு அப்பால் ஒரு கொட்டகையில் இந்திப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் படைவீரர்களால் கால்களில் சங்கிலி இடப்பட்டு  மகன்கள் தூக்கிலிடப்படுவதைப் பார்க்க இந்தச் சாலைவழியாக அழைத்துச் செல்லப்படும் கவிஞனும் பேரரசனுமான ஸஃபாரை நினைத்துப் பார்க்கிறேன். நாடுகடத்தப்பட்ட நிலையில் அவன் எழுதினான்:  "துரதிர்ஷ்டம் பிடித்த ஸஃபார் தனது வாழ்க்கையின் பாதியை நம்பிக்கையிலும் அடுத்த பாதியைக் காத்திருப்பிலும் கழித...

திக் நியட் ஹானின் காதல்

நம் காலத்தில் வாழும் வியட்நாமைச் சேர்ந்த பவுத்தத் துறவி திக் நியட் ஹான், தன் இளம்பருவத்தில் இளம் பிக்குணியுடன் ஏற்பட்ட காதலைப் பற்றி தனது உரையொன்றில் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது. “ஒரு துறவியாக, காதலில் விழக்கூடாது. ஆனால், காதல் நமது உறுதிப்பாடுகளை உடைத்துவிடக் கூடியது.” என்று அந்த நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். ’கல்டிவேட்டிங் தி மைண்ட் ஆப் லவ்’ என்ற நூலில் இதைப் பற்றி எழுதியுமிருக்கிறார். ஒரு மென்மையான காதல் கதை படிப்படியாக பவுத்த ஞானத்தைத் தெரிவிக்கும் செய்தியாக அவரது எழுத்தில் அது மாற்றம் பெறுகிறது. பவுத்தத்தில் ஒரு துறவியின் காதல் தவறாகப் பார்க்கப்படும் சூழ்நிலையில், திக் நியட் ஹான் தனது அனுபவத்தை நேர்மையாகப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1950-களில் மக்கள் சேவையின் அடிப்படையில் பவுத்தத்தை உருவாக்க திக் நியட் ஹான் முயற்சி செய்தபோது அவர் அந்தப் பெயர் தெரியாத பிக்குணியைச் சந்தித்ததாகக் கூறுகிறார். “நான் அவளைப் பார்த்தபோது, அது முதல்முறை சந்திப்பாக நிச்சயமாக இல்லை. முதல்முறை சந்தித்திருந்தால் அத்தனை சுலபத்தில் அது நிகழ்ந்திருக்குமா? ஒரு பத்திரிகையில் நான் ...

ஒரு அஞ்சல் அலுவலகமும் இல்லாத நாடு - மூன்றாம் பகுதி - ஆஹா சாகித் அலி

"தொலைந்தவற்றின் முழுமையான வரைபடமும் தீவைக்கப்படும். தொழுகைக்கு அழைப்பவர் இறந்ததிலிருந்து மினாரெட்டின் பாதுகாவலன் நான். நான் உயிர்பிரிவதற்குள் வா. சூரிய ஒளிக்கு நேரே உள்ள, சில சமயங்களில் வெள்ளை, பின்னர் கருப்பாக, ஒரு பைஸ்லி மலராகத் தான் இருக்க வேண்டும்.  அதன் புறத்திலோ பசைகொண்ட தூய்மை, ஈரமாக இலையுதிர் காலத்தின் கடைசி நாட்டை நோக்கி மலர்கிறது -  அதை விலைக்கு வாங்கு, நான் ஒரேயொரு முறை வெளியிட்டு விடுகிறேன், இரவில். நான் கொல்லப்படுவதற்குள், எனது குரல் ரத்து செய்யப்படுவதற்குள் வா.” இந்த கருத்த மழையில், விசுவாசமாய் இரு, மாய இதயமே, இது உன்னுடைய வலி. அதை உணர். அதை நீ உணரவே வேண்டும்.  “எதுவும் மிஞ்சப் போவதில்லை. எல்லாமும் முடிந்துவிட்டது,” அவனது குரலை நான் திரும்பக் கேட்கிறேன் : “இது வார்த்தைகளின் சன்னிதி. எனக்கெழுதிய கடிதங்களை நீ இங்கே கண்டடையலாம். அத்துடன் என்னுடைய கடிதங்களையும். சீக்கிரம் வா, வந்து இந்த காணாமலாக்கப்பட்ட கடித உறைகளைத் திற.”  நான் மினாரெட்டை அடைகிறேன் : நான் நெருப்பு வட்டத்துள் இருக்கிறேன். நான் இருட்டைக் கண்டடைந்துவிட்டேன்.  இது உன்னுடைய வலி. அதை நீ உணர...

தனி தனி குழந்தைகள்

அன்று நண்பகலில்  கம்பர் தெருவில் இருக்கும்  அடுக்குமாடிக் குடியிருப்பின்  முதல் தளத்து வீட்டின் ஜன்னல் கம்பிவலையில்  தோன்றிய முகம் முதலில்  ஏதோவொரு நீர்வண்ண ஓவியமாகவே தோன்றியது ஜன்னல்கள் வழியாக  உள்ளிருந்து வேடிக்கை பார்க்கும் முகங்களை  சமீபமாக  வீடுகளில் நான் பார்க்கவேயில்லை  அதனால் அந்தச் சித்திரத்தை  ஊன்றிப் பார்த்தேன் கம்பி வலையில் பதித்து  தெருவை வெறித்துக் குத்திப் பார்த்திருந்த  கண்கள்  மூன்று வயது குழந்தையுடையது உதடு தடித்து கண்கள் பழுத்து  ஓரங்களும்  கனவுகளற்று அழுந்தியிருந்த  அந்த முகத்தில்  ஆட்டிசம் உருகிக் கொண்டிருக்கிறது குட்டிப்பையா  குட்டிப்பாப்பா  மதி இறுகிய ஊர் இது  மதி இறுகிய தெரு இது  நீயும்  நானும்  உள்ளேயும் வெளியேயும்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்  தனி தனி  குழந்தைகள் .

சாந்த்னி சவுக், டெல்லி - ஆஹா சாகித் அலி

இந்தக் கோடைக்கால வீதியை விழுங்கு ,  அப்புறம் மழைக்காலத்துக்குக் காத்திரு .  மழை ஊசிகள்  நாக்கில் உருகுகின்றன .  இன்னும் தூரத்துக்குப் போவாயா ? வறட்சியின் ஓர் நினைவு உன்னைப் பிடித்திருக்கிறது  பசிகொண்ட வார்த்தைகளின் ருசி  உனக்குத் தெரியும் உப்பின் எழுத்துக்களை நீ அசைபோடுகிறாய்  உன்னால் இந்த நகரத்தை அலசிக் கழுவ முடியுமா ?  கடிபட்ட நாக்கிலிருந்து மறையும் ரத்தத்தைப் போலே .