இந்தக்
கோடைக்கால வீதியை விழுங்கு,
அப்புறம்
மழைக்காலத்துக்குக் காத்திரு.
மழை
ஊசிகள்
நாக்கில்
உருகுகின்றன.
இன்னும் தூரத்துக்குப் போவாயா?
வறட்சியின் ஓர் நினைவு உன்னைப் பிடித்திருக்கிறது
பசிகொண்ட
வார்த்தைகளின் ருசி
உனக்குத்
தெரியும்
உப்பின்
எழுத்துக்களை நீ அசைபோடுகிறாய்
உன்னால்
இந்த நகரத்தை
அலசிக் கழுவ முடியுமா?
கடிபட்ட
நாக்கிலிருந்து மறையும்
ரத்தத்தைப் போலே.
Comments