பதினைந்து வயதான போது, வினோரா விடுதியில் தங்கிப் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான், அவருக்கும் அவரது சகாக்களுக்கும் பெண் அங்கம் அங்கமாகப் பிரிந்து தெரியத் தொடங்கியிருந்தாள். பெண்ணின் பாலுறுப்புகளைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகளை அவர்கள் மிட்டாயைப் போல வாயில் சுவைக்கத் தொடங்கியிருந்தனர். அதற்கு முன்பு பெண் என்பவள் வினோராவுக்கு, அவள் முகத்தை மையமாகக் கொண்டவளாகத் தெரிந்தவள். வினோராவுக்குப் பெண் அங்கம் அங்கமாகப் பிரியத் தொடங்கிய போது, அவளது தொப்புளும் முலைகளும் தான் முதலில் அவரை ஈர்த்துப் பாடாய்ப்படுத்தத் தொடங்கியிருந்தது.
வினோராவை விடுதிக்கு அனுப்ப வீட்டில் ஆயத்தம் தொடங்கிய போது, மார்பின் பிளவு கோடாகத் தெரியும் நடிகையின் புகைப்படம் வெளிவந்த வெளிவந்த பத்திரிகை ஒன்றைப் பார்த்தார். வினோராவைக் கவர்ந்த அவளது புகைப்படம் வெளிவந்த பக்கத்தை மட்டும் கிழித்து ரகசியமாக வைத்துக் கொண்டார். தன் ரகசிய மூலையில் இருக்கும் முதல் காமரூபத்துடன் கற்பனையில் குடித்தனத்தைத் தொடங்கினார்.
விடுதிக்கு வந்தபின்னர், தனது அன்னைக்கு தினசரி அழுதுகொண்டே கண்ணீர், காகிதத்தில் வழிய வழிய இன்லாண்டு கடிதங்களை எழுதினார். முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையன்று, மதிய உணவுக்குப் பின்னர், அறையில் யாரும் இல்லாத போது, வினோரா, தனது பையிலிருந்து நடிகையின் புகைப்படம் இருந்த தாளை எடுத்தார்.
அவளது முலைகள் பிரியும் கோட்டை மோகித்தபடியே, முதல் முறையாக சுயமைதுனத்தில் ஈடுபட்டார். வினோராவின் வேட்டியில் ஈரம் படிந்தது. ஆண்குறியின் மொட்டு அந்த ஈரத்தில் குளிர்ந்தது.
முதல் மைதுனத்துக்கு முந்தைய வினோராவின் உலகம் உலர்ந்து இலேசாக சற்றே பூமிக்கு மேல் ரகசியமற்று அந்தரங்கமே இல்லாத ஒளியைச் சூடி ஆடிக் கொண்டிருந்தது.
அவர் வேட்டியில் இருந்த ஈரத்தை எழுந்து நின்று பார்த்தார். எண்ணமாய், பருப்பொருளாய், சுற்றிலும் சுவர்களாக மாறியிருந்தது.
ஹிம்சை என்ற வார்த்தையை வினோரா முதல் முறையாக உணர்ந்து உச்சரித்தார்.
Comments