Skip to main content

நிலவற்ற ஓர் இரவு



கோ வுன்



நிலவு உதிக்காத வான்
இருப்பினும்
உனக்கும் எனக்கும் இடையில்
இரவெல்லாம் சுடர்ந்து ஒளிர்கிறது
இருநூறு மைல்கள்
நாளை இறந்துபோகும் நாய்க்கு
இறக்கப் போவது தெரியாது.
மூர்க்கமாகக் குரைத்துக் கொண்டிருக்கிறது. 

Comments