Skip to main content

நிழல் ஆடும் முன்றில்



46 வயது யுவதி அவள்

தெரு மூலையில் இருக்கும்

வீட்டின் முற்றத்தைத் தெளித்துவிட்டு

காலியான பிளாஸ்டிக் வாளியை

முறத்தைப் போல உயர்த்திப் பிடித்து

தனது செல்லத்துடன்

காலையிலேயே விளையாடிக் கொண்டிருந்தாள்

அதன் பெயர் என்னவென்று கேட்டேன்

'நிழல்' என்றாள்

நிழலுக்கோ

உலகை முழுக்கப் பிரதிபலிக்கும்

கண்கள் கோலிக்குண்டின் தீர்க்கம்

நிழலுக்கோ

உடல் முழுதும் துள்ளும் பரபரப்பு

அந்தத் தெரு முழுவதையும்

உயிர்க்கச் செய்யும்

வாலின் துடிப்பு


அது

நிழல்

நீ

நிழல் ஆடும் முன்றிலா

என்று

கேட்க வேண்டும்.

Comments