அழைத்தாலும் அழைக்காதது போன்று
அதலபாதாளத்து
நினைவிலிருந்தெழும்
அசரீரியாய்
பட்டுமிருதுடன் தொனிக்கும்
அவள் பெயர் ஹேமா...
சிவனின் மனைவி
பார்வதியின்
இன்னொரு நாமகரணம்
ஹைமவதி
என்கிறது புராணம்.
பொன், தூய்மை என்றும்
பொருள்படும்
பெயர் ஹேமா.
மலையில் காட்டில் நதியில் அருவியில்
காற்றாக ஒலிக்கிறது
ஆதிப்பெயர்களில் ஒன்றான
ஹேமா
ஹேமா
ஹேமா
ஹேமா.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments