என் சமீபத்திய கவிதைகளில்
இடம்பெறும்
நான்ஸி
யாரென்று கேட்டான்
நண்பன்.
வேளச்சேரியின்
புராதன பங்களா வீட்டில்
தனியாக வசிக்கும்
பூனை
என்றேன்.
நான்ஸியைக் கடக்கும் நான்ஸி
அழகின் உச்சாடனத்தைத் தாங்கியிருக்கும்
பெயர்கள்…
அவற்றுக்கு உடல் இல்லை
வீடு இல்லை
ஊர் இல்லை
காணி இல்லை
தெரு இல்லை
சுற்றுச் சுவர்கள் இல்லை
பூட்டு இல்லை
சாவிகூட இல்லை
வெறும் நிழல்கள் மட்டுமே
என்றபடி
நான்ஸி வசிப்பதாகச் சொல்லப்படும்
வீட்டைத் தாண்டி
இருளுக்குள் சென்று மறைந்தது
நான்ஸி.
000
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments