மாம்பழங்களின் பருவம்
சமீப ஆண்டுகளாக
கோடை தாண்டியும் நீள்கிறது.
மாம்பழங்களின் அளவு
பப்பாளிப் பழங்களுக்குப் போட்டியாக
பெருக்கத் தொடங்கிவிட்டது.
மாம்பழங்களின் பருவம் நீளும் போது,
அவை பப்பாளிப் பழங்கள் அளவுக்குப் பெருக்கும்போது
சற்றே வடுபட்ட மாம்பழங்களை
தாராளமாகப்
பணிப்பெண்களுக்கு வீட்டுக்காரர்கள்
கொடுப்பது நடக்கிறது.
பைகளில் தங்கள் குழந்தைகளுக்காக
வீட்டுப் பணிப்பெண்கள்
அந்த மாம்பழங்களைச் சுமந்து செல்லும்போது
மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிடுகிறது.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments