அமைதி மற்றும் தெளிவுடன்
இருப்பதை நிலவு அறியாதுமணலும் அறியாது தான் மணல் என்று.
உடனேயோ எப்போதுமோ
எந்த வஸ்துவும் அறியப்போவதில்லை
இங்கு அலாதி வடிவத்தோடு இருப்பதை.
யானைத் தந்தத்திலிருந்து உருவாக்கப்பட்ட காய்கள்
தெரியாத சதுரங்கத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளன
அவற்றை வழிநடத்தும்
கையிலிருந்து, முதல் நகர்த்தலிலிருந்து.
குறுகிய மகிழ்ச்சி நீடித்துறையும் வேதனையாலான
மனிதவிதி
ஒருவேளை இன்னொருவரின் கருவியாக இருக்கலாம்.
நம்மால் அறியமுடியாது.
அதற்கு கடவுளின் பெயரைக் கொடுப்பதும் உதவாது.
அச்சம், சந்தேகம், நம்மால் முடிக்க இயலாத மதியவேளைப் பிரார்த்தனை
எல்லாமும் வீண்.
நான் என்ற அம்பை எந்த நாண் விடுவித்திருக்கும்?
அந்தக் கரத்தின் இலக்கு எந்த உச்சமாக இருக்கும்?
Comments