மரத்தினடியில்
தோன்றினார்கள் அவர்கள்
அவன் முகம் தொட்டு
அவள் ஆகியபடியிருந்தாள்
அவள் விரல்களில் மோதி மோதி
அவன் ஆகிக்கொண்டிருந்தான்
வளையல்கள் தொங்கட்டான்கள்
அலைபேசிகள்
எல்லாம் அந்த மரத்தடியில்
வரிக்குதிரைகளின் வரிகள்
மேய்ந்து கொண்டிருந்தன
அடுத்த சுற்று நடையில்
அவள் அந்த இடத்தை விட்டு
முதுகுகாட்டி
நீங்கிப் போனதைப் பார்த்தேன்
குனிந்து அலைபேசியை வெறித்துக்
கொண்டிருக்கும்
அவனை
பார்த்துக் கொண்டிருக்கிறது
அவளையும் அவளையும் ஈன்ற
அந்தச் சிறுமரம்
Comments
// வரிக்குதிரைகளாக மேய்ந்து கொண்டிருந்தன// அழகு