Skip to main content

Posts

சைக்கிள் கைப்பிடிக் கண்ணாடி

வீட்டுத் திண்ணைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளின் கைப்பிடிக் கண்ணாடி வீட்டுக்கு வேறொரு தோற்றத்தை காட்டிக் கொண்டிருந்தது. கண்ணாடிக்குள் சத்தமோ அழுகையோ இல்லாமல் தெரியும் அவர்களின் வீட்டை சிறுவன் ஆசையுடன் நுழைய நுழைய பார்த்துக் கொண்டிருந்தான். (நன்றி: அகழ் இணைய இதழ்) 

ஆந்தைப் பூனை

இரவில் ஆந்தையாக மாறும் பூனையை நான்ஸி வீட்டு பால்கனியில் தற்செயலாகப் பார்த்து எப்படியென்றேன்? எல்லாம் ஒரு வட்டம் உள்ளே ஒரு முக்கோணம்தான் என்றது சாவதானமாய். (நன்றி : அகழ் இணைய இதழ்) 

யவனிகா ஸ்ரீராம் சுமக்கும் ஆதிப்பொறுப்பு

பொய் சொல்வதால் ஒருவருக்கு அனுகூலம் கிடைக்கும்போது ஒருவர் ஏன் உண்மையைச் சொல்ல வேண்டும்? -விட்கென்ஸ்டீனை தத்துவம் நோக்கிச் சிறுவயதில் தூண்டிய கேள்வி இது. கற்றறிந்தவருக்கும் அறிவுஜீவிக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தையவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தையவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல் ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர். - பாபா சாகேப் அம்பேத்கர் கொஞ்சம் நக்கித் தின்னக் கிடைத்தால் போதும் அன்றே முடிகிறது இந்தியப் புரட்சி - குஞ்சுண்ணியின் கவிதை சமகாலச் சிறுகதைக் கலைஞர்களில் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர். எனது நண்பர். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நாவல் எழுதும் முயற்சியில் இருப்பதாகச் சொன்னார். குறைந்தபட்சம் நாவலொன்றை எழுதினால்தான் சாகித்ய அகாதமிக்கு தகுதியாவது பெறமுடியுமென்றார். சாகித்ய அகாதமி வாங்கிவிட்டால், தமிழ்நாடு அரசு தரும் வீடு உறுதியாகிவிடும் என்றார். சாகித்ய அகாதமி கிடைப்பதற்கு நாவல் எழுதினால் மட்டும் போதுமா? இன்னும் பல வயதான எழுத்தாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எழுத்...

பூனைகள்

நாய்கள் ஆர்ப்பாட்டமாய் அதிகாலையில் நடை செல்லும்போது பூனைகள் தெருவின் மூலைகளிலும் பங்களாக்களின் ஜன்னல்களிலும் அமைதியாய் அமர்ந்து குறிப்பெடுத்துக்கொண்டிக்கின்றன.

போவது - ஈயூனிஸ் டி சௌஸா

நீ போகிறாய் என்று அவள் சொன்னாள். அவனது சவப்பெட்டி இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்ட போது. அவன் பதிலளிக்கவில்லைதான். அவன் என்றும் பதிலளித்ததில்லை. வேர்க்கடலைகளைக் கொறித்தபடி மாலை செய்தித் தாளை மேய்ந்துகொண்டிருந்தான். காலை உணவில் முட்டையின் மஞ்சள் கரு அவனது தாடையின் ஓரத்தில் வழிந்தது. (நன்றி : அகழ் இணைய இதழ்) 

நிலைத்திருப்பது - ஈயூனிஸ் டி சௌஸா

பறந்தோடிச் சென்றவை மூன்று பெண் கிளிகள் தான். ஆண் கிளியோ வீட்டில் நிலைத்துவிட்டது. என்  கையிலும் பாதத்திலும் காத்திருக்க விரும்புபவனைப் போல. அதில் எங்கேயோ ஒரு பாடம் இருக்கிறது. (நன்றி: அகழ் இணைய இதழ்) 

நிலா - ஈயூனிஸ் டி சௌஸா

வடிவம் கம்பீரம் குலைய அறையப்பட்டு வடுபட்டு கூம்பு கோபுரங்களின் பின்னால் தனது முகத்தை மறைத்து நிற்கிறாள் நிலா. மேலெழுந்து உதயமாக அவளுக்கு அவசரமேதும் இல்லை: அவள் கடக்கவேண்டும் ஒரு பாலைவனத்தையும் நொறுங்கிய குன்றுகளின் வரிசையையும். (நன்றி: அகழ் இணைய இதழ்)