முழு இருட்டையும்
நீல விளக்கொளி அரையிருட்டையும்
உற்றுப் பார்க்கப் பழகிவிட்டேன்
பேயின் அரவம்
கழிப்பறையில்
சமையலறையில் உலவும் எலியளவுகூட
எங்கும் இல்லை
பேய்
பின்வாசலில்
தோட்டத்தில்
மாநகரகச் சாலைகளின் முடிவில்
மின்மாற்றியின் கீழே இருள்மூலையில்
இல்லவே இல்லை.
பேய் இப்போது என்னைத் தேடிவந்தாலும்
எனது வளர்ப்பு நாய்
நெருங்கவிடாது போல.
உறங்கும் தலையணைக்கு அருகே
தடவிப் பார்க்கிறேன்
பேய்
இருந்தால் நன்றாக இருக்கும்
நற்றுணையாக இருந்திருக்கும்.
Comments