Skip to main content

அருவம் உருவம் நகுலன் 100 அறிவிப்பு



நகுலனின் நூற்றாண்டை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் 'அருவம் உருவம் நகுலன் 100' தொகை நூலுக்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன.  ஓவியர் மணிவண்ணன் வரைந்துள்ள 'அருவம் உருவம் நகுலன் 100' தொகை நூலுக்கான அட்டைப்படம் இது. ஓவியர் மணிவண்ணன் வரைந்து வடிவமைத்தது. ஓவியன் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான ஸ்டாரி நைட் ஓவியத்தின் பின்னணியில் நகுலன் இடம்பெற்றிருக்கிறார்.

புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழுத்துக் கலைஞன் அவர். அவரது நூற்றாண்டை முன்னிட்டு அவரது படைப்புகளை மதிப்பிடும் தொகை நூல் ‘அருவம் உருவம்’. இதுவரை தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலச் சிறுகதை மற்றும் கவிதைகளின் மொழியாக்கம், நகுலனின் சித்திரங்கள், புகைப்படங்கள், கடிதங்கள், நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் கட்டுரைகள் என நகுலனைப் புரிந்துகொள்வதற்கான முழுமையான ஆவணம் இது.

 புதுமைப்பித்தன், பிரமிள், மா.அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணியாக நகுலன் இருக்கிறார். இருப்பு மீதான சார்பும், இருப்பு மீதான பூதாகரமான பிடிமானமும், இருப்பு தொடர்பிலான பிரமாண்டமான அகந்தையும் பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இன்மையைத் தனித்தவொரு வசீகர இருப்பாகச் சுட்டிக்காட்டிய நகுலன் மீதும் அவரது படைப்புகள் மீதும் கவனம் செலுத்துவது ஒரு விழுமியத்தைத் தக்கவைப்பதும்கூட.

அய்யப்ப பணிக்கர், ப. சகதேவன், ஆனந்த், சி. மோகன், கலாப்ரியா, ந. ஜயபாஸ்கரன், விக்ரமாதித்யன், சுகுமாரன்,  கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், எம். யுவன், எஸ். சண்முகம், பி. ரவிக்குமார், ஜி. முருகன், ஸ்ரீ நேசன், கண்டராதித்தன், ராணிதிலக், ஆசை, பிரவீண் பஃறுளி, சர்வோத்தமன், , பூமிச்செல்வம், கல்யாணராமன், வே. நி. சூர்யா, ஆர் ஆர் சீனிவாசன், கே. எம். ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, நரேந்திரன், சுந்தரன். எம், மணிவண்ணன், சபரிநாதன், இளங்கோ கிருஷ்ணன், பாலசுப்ரமணியம் பொன்ராஜ், வரதராஜன் ஆகியோர் பங்குபெறும் தொகைநூல் இது.  

நூல்வனம் பதிப்பகம் 'அருவம் உருவம் நகுலன் 100' தொகை நூலை வெளியிடுகிறது.   'அருவம் உருவம் நகுலன் 100' தொகைநூல் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் புத்தகச் சந்தையில் கிடைக்கும்.   

Comments

சிறப்பு மற்றும் வாழ்த்துகள்