இந்தப்
பாழில் பதிக்க
எதுவோ
ஒன்று காத்திருக்கிறது
ரோமம்
மூடிய
எதுவோ
ஒன்று
வெளியே
ஜனவரிப்
பனியில்
இன்னமும்
உறங்காமல் விழித்திருக்கிறது.
நான்
ஜன்னலைத் திறக்கிறேன்:
பத்தாயிரம்
மைல்களுக்கப்பால்
குமாவுனின்
மலைச்சரிவுகளில்,
ஆட்கொல்லிக்கு அஞ்சி
குடியானவர்கள்
வீட்டுக்குள் பூட்டியிருக்க,
அவர்களின்
குடிசைகளோ
உறைபனிச்
சாந்தால் சுற்றிப்
போர்த்தப்பட்டுள்ளது.
எனக்கு
முன்னால் மேஜையில்
காற்று
பக்கங்களைப் படபடக்க வைக்கிறது.
எதுவோ
ஒன்று அசையத் தொடங்குகிறது:
கிராமத்தினர்
மறுபடியும்
உயிர்ப்புக்குத்
திரும்புகின்றனர்,
சூரியனோ
அவர்களது குடிசைகளுக்கு
திரும்பவும்
ஆடை அணிகளைப் பூட்டுகிறது.
கழுவத்தக்க
வைகறையின் ஊதாக்களை
அது
கழுவுகிறது.
புத்தகப்
பக்கத்துக்கூடாக
எதுவோ
ஒன்று அலைந்துலவுகிறது.
Comments