வீடென்று எதனை
யாரை அழைப்பது
ப்ரவுனி
வீடென்ற ஒன்று உண்டென்றே நம்புகிறேன்
என்று எழுதிய கவிஞனை
நம்பியவன்தான் நானும் ப்ரவுனி
வீடு
தெரு
என்ற பேதம்
எனக்கு இப்போது குழம்பத் தொடங்கியுள்ளது
ப்ரவுனி
இன்று முதல் உனக்கு வாசலில் உணவிடுகிறேன்
நீ முதலில் தெருவுக்குச் செல்லம் ஆகிவிடு
உன்னைத் தொடர்ந்து
நானும் ஆகிறேன்.
Comments