கண்ணாடித்
துண்டுகள் பதித்த கம்பளியில்
எனது
பெற்றோர் இதமாய்
உறங்கிய
அந்த இலையுதிர்காலங்கள்
எனது
அம்மாவின் கரங்களில் வளையல்கள்
இரவில் உறைந்த
நதிகளின் அலைகளைப் போல
தொழுகைகளுக்குப்
பிறகு
அவள்
தனது அறைக்குள் போகும்போது
படிகளில்
உடைபடும்
ஆண்டுகள்
கழிந்தபின்னர்
உடைபடும்
குளிருக்குள்
பனியின்
மெல்லிய ஒலியைக் கேட்டேன்
தீவட்டிகளுக்காக
கூரைகளிலிருந்து
கூர்பனிக் கழிகளை இழுக்கும்
ஆட்களால்
எங்கள் வீடு சூழப்பட்டது
நீர்முனைகளை
தீப்பிடிக்க வைக்கும்வரை
சிமெண்டு
கருஞ்சிவப்பு சுவர்களில்
அவற்றைத்
தேய்க்கின்றனர்.
காற்று
புதையும்
ஈர மணல்பனி
என்
தந்தையும் தாயும்
வீட்டை விட்டு வெளியே
கால்
வைக்கும்போது
எரியும்
வீட்டுக்குள்
ஒரு
விதவை
நதிகளைத்
தனது புஜங்களால்
உடைத்து
நொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
Comments