Skip to main content

மிக நெருக்கமாக - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  


உனது அழகால் நிரம்பிய

என் கண்கள்,

நான் விழித்தேன்.

உனது ஆடை அணிகளைப் போல

காற்று புத்துணர்வை அடைந்துள்ளது.

என் வைகறையில்

உன் தேகத்தின் சுகந்தம் ஊடுருவியுள்ளது.

நீ உறங்கும் படுக்கை அறையில்

மேற்குக் காற்று

உலவி அலைந்திருக்க வேண்டும்.

Comments