Skip to main content

இன்றிரவு - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்


 ஒரு இரவுவழியாக

ஒரு இரவை 

நித்தியத்தின் நெடுவெளியில்

வாழ்ந்து தீர்த்துவிட்டேன்

எனது நேசத்துக்குரியவளின்

சாரம் நிரம்பிய

ஒரு அமிர்தக் கலசம் போன்றது.

இன்றிரவு,

இந்தக் கரங்கள்தான்

அதை

எடுத்துப் பருகின.

Comments