சமீபநாட்களாக
போதையின்
அழுத்தம் குறைவதைப்
போல
இரவு
வடிந்துகொண்டிருக்கிறது.
வண்ணமயமாக நறுமணத்துடன்
மலரும்
பூக்களைப் போல
பகல்
புடைத்தெழுகிறது.
மதுக்கோப்பைகள்
காலியாகிவிட்டன!
கவனம்
கொள்ளுங்கள்
வசந்தம்
வந்துகொண்டிருக்கிறது;
இதயங்களை
வேட்கையால் நிரப்புங்கள்
உங்கள்
கண்களையும்
ஏக்கத்தால்.
Comments