இந்த இருட்டான
மழையிரவில்
கூடுதல் துல்லியத்துடன்
தெரிகின்றன
வாழ்வில்
சுமந்தேயாக
வேண்டிய
டிசம்பர் வரும்போது
குளிரடர்ந்த வயல்களின் மேல்
வேறுவகையான வானம்
வேறுவகையான ஒளியின்
தப்படிகளைத் தொடரும்
இன்னொரு வகையான இருட்டு.
கண்ணுக்குத் தெரிய
ஒருநாய்கூட இல்லாத வெளியில்
தைரியமாக நின்றுகொண்டிருக்கும்
பனி தீண்டிய இந்தச் சிறுவீடுகளில்
நம் துணையைக் கோருகிறது.
ஜனவரி
சின்னஞ்சிறிய
ஆரம்பப் பள்ளியின்
பனி உறைந்த ஜன்னலில்
குழந்தைகளின் கைவிரல் ரேகைகள்
எங்கோ படித்தது:
குரூரமான சிறைகளை
பராமரிப்பதன் வாயிலாகவே
ஒரு பேரரசு
தன்னை
நிலைநிறுத்திக்கொள்கிறது.
Comments