ஒரு பாக்கெட் கடிகாரத்தை விற்பதற்காக
தெருவில்
ஒருவன்
என்னிடம் ஓடிவருகிறான்.
பழையகால பாதிரியைப்
போல
கருப்புடையில்
ஒரு ஆவியைப்
போல்
அவன் வெளிறிப்போயிருக்கிறான்.
ரயில் நிலையத்துக்கு
மேலேயுள்ள
மணிக்கூண்டின்
கடிகாரம்
10.55 ஆனபோது
நின்றுவிட்டிருந்தது.
வங்கியின் மேலுள்ள
கடிகாரமோ
இது 3 மணிதானென்று
சத்தியம் செய்தது.
முள்களோ எண்களோ
இல்லாத
அவனது கடிகாரத்தைக்
காட்டி
அவன் வம்படியாய்
என்னை நிறுத்திவைத்திருக்கிறான்.
விலை சொல்வதற்கு
முன்பாகவே
அவனுடைய கடிகாரத்தை
நான் அவதானித்து
பாராட்ட வேண்டுமென்றும்
விரும்புகிறான்.
Comments